Tuesday 26 July 2016

எனது டைரி 26072016

சரியாக இரண்டுமாத காலம் நான் டைரி எழுதாமல் விட்டிருக்கிறேன் என்பது மிக தவறான விசயம் ஆனால்
கடந்த இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்தித்து வருகிறேன்
ஆன்மீக நிலையில் என்ன நிலையில் உள்ளேன் என்றே தெரியவில்லை அதற்கான முயற்சியை தொடர்கிறேன்
வணக்கம் நண்பர்களே இனிமேல் தொடர்ச்சியாக எனது ஆராய்ச்சியில் இறங்கி பகிர போகிறேன்

Thursday 26 May 2016

மனம் எனும் மந்திரம் 26.05.2016


மனம் ஒரு அற்புத கருவி , ஆனால் அதன் ஆழம் எத்தனை வசீகரம் என்ன என்னவெல்லாம் மனதை கொண்டு செய்யலாம் என்பதை நாம் அறிய மாட்டோம்
மனசு சரியில்லை என்பார்கள் மனம்மகிழ்ச்சி என்பார்கள்
சில நேரம் காரணம் வெளியே தெரியும் பல நேரங்களில் வெளியே தெரியாது

சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சி என்பது மனதை பல பகுதிகளாக பிரித்து ஆய்ந்து செல்கிறது
சப்காண்சியஸ் மைண்ட் தான் நமது முழு வாழ்வையும் நடத்தி செல்கிறது தெரியுமா எத்தனை பேருக்கு தெரியுமோ அறியேன்
அந்த ஆழ்மனதை கண்ரோலில் எடுக்க நாம் வெளி மனதில் இருந்து ஆரம்பிக்கிறோம்
அதாவது கலங்கிய குளத்தை கொஞ்ச நேரம் கலங்காமல் வைத்து விட்டு ஆற்றுக்குள் மெல்ல இறங்கி
அடி ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார்க்க போகிறோம்
அதுதான் தியானம்
ஆழத்தில் ஊடுருவி பார்க்க இயலாதவர்கள் குருவின் துணையை நாடலாம் குருன்னா சாமியார்கள் இல்லை
இறைவனே நமது குரு நாதன்
அவரை வேண்டி அமைதியாக தியானத்துள் போக போக விசயங்கள் முடிச்சை அவிழ்த்து
நம் முன் நிற்கின்றன
நாம் யார் மனதை இயக்குவது எது கடவுள் எங்கிருக்கிறார் இதெல்லாம் சொன்னா புரியும்மா
இல்லை புரியாது சொல்லவும் முடியாது உள்ளே செல்லனும் சூட்சுமமா சமைந்திருக்கும் அந்த பரம் பொருளை பார்க்கனும் அதனுடன் ஒன்றாகனும் என்றால் தியானம் செய்யனும்

26.05.2016

Sunday 22 May 2016

எனது டைரி 23052016

கடந்த சில நாட்களாக பயிற்சி சரிவர செய்யவில்லை ஆனாலும் எண்ணங்களின் ஒழுங்க அவை எப்படி உருவம் பெற்று உணர்வுகளை தீண்டி ரியாக்கசன் செய்ய வைக்கிறது என்பதை நிதானமாக பார்க்க முடிகிறது .
ஆனால் இன்னும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை . அதற்கு இன்னும் நிறைய மன ஆற்றல் தேவை படுகிறது
இந்த மன ஆற்றலும் மனதிலேயே தான் இருக்கிறது . மன ஆற்றலை விரும்பிய திசையில் செலுத்த இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை படுகிறது .
நேற்று அப்பியாசி மீட்டிங் நடை பெற்றது அதில் பேசும்படி சொன்னார்கள் . எனக்கு தியானம் சம்பந்த பட்ட விசயத்தில் என்னுடன் சமமாக இருப்பர்களிடம் பேசி குழப்பி கொள்ள நேற்று விருப்பம் எழவில்லை .
ஏனெனில் இது குருவின் துணையை மட்டுமே வேண்டி முன்னேறு ம் பயணம்

23.05.2016

Thursday 12 May 2016

எனது டைரி 13.05.2016

.
 
 
 
நேற்று ஒரு நாள் மட்டும் விரதம் என்ற கட்டு பாட்டு கடந்த பத்து வாரங்களாக கடைபிடித்து வருகிறேன்
இதன் பயன் உடல் ரீதியாக மட்டுமின்றி ஆன்மீக ரீதியாக உதவியதை நேற்றைய தியானத்தில் அறிந்தேன்
என்னவென்றால் , நேற்று இரவும் சரி இன்று காலையும் சரி தியானம் துல்லியமாக அமைந்ததுவியப்புக்கு உரியது
மனம் குறிப்பிட்ட புள்ளீயில் இருத்தவே எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும் ஆனால் மனம் தானாக குவிந்து விட்டது எண்ணங்கள் மறைந்து  வெறும் கவனிப்பு நிலை நீடித்தது காலத்தால் உணர்ந்து கொள்ள முடியாதது அந்த நிலை எப்போது மனம் வந்ததோ உடனே அந்த நிலை நீங்கியது .

13.05.2016

Tuesday 10 May 2016

எனது டைரி 10.05.2016

நல்ல மனிதன் கெட்ட மனிதன் நல்லது கெட்டது இதெல்லாம் உலகில் ஏன் இருக்கிறது
உலகம் முழுக்க நல்ல விசயங்களும் பூத்து குழுங்கும் மலர் சோலைகளும் துன்ப மில்லாத வாழ்வும் எல்லாருமே நல்லவர்களாக இருந்து விட்டால் என்ன?
ஏன் துன்ப சுமை நம்மை அழுத்து கிறது
துன்ப மற்ற இன்ப வாழ்வை நோக்கிய கனவுகள் எல்லாருக்கும் எல்லா உயிரினத்திற்கும் இருக்கும் எறும்பு கூட தன்னை மனிதர்கள் துன்புறுத்துகிறார்கள் என கடவுளிடன் தினமும் புகார் சொல்லி கொண்டே இருக்கும்
ஆனால் ஒரு கணம் ஒரே கணம் இதெல்லாம் திரையில் ஓடும் படம் என்றும்
இதெல்லாம் உண்மை இல்லை என்பதும் தெரிந்து விட்டால்
என்ன செய்வோம் எல்லாவற்றிற்கும் சிரிப்புதான் வரும் நம்மிடம் இருந்து நாமே சிரிக்கும் புத்தர்களாகிடுவோம்
நாம் கனவு காண்கிறோம் அதில் நாம் ராஜாவாக இருக்கிறோம் விழித்தெழுந்து பார்த்தால் அப்படி ஏதும் இல்லை இன்னொரு நாள் கனவு காண்கிறோம் அதில் பிச்சை காரனாக இருக்கிறோம் அதே போல விழிப்பில் அது கனவு என்று புரிகிறது .
என்ன பிரச்சனை என்றால் நாம் தினமும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்கிறார் ரமணர்
மாந்தர்கள் பாபிகள் என்று இயேசுகிறித்து சொல்கிறாரே என்ற கேள்விக்கு ரமணர் இவ்வாறு பதிலளித்தார்
நான் மனிதன் என நினைப்பதே மிகப்பெரிய பாவம் என்றார் .
ஆகவே நாம் காண்பது கனவு இதில் நல்ல கனவு கெட்ட கனவு சீர்திருத்தம் செய்த கனவு என்றெல்லாம் ஏதும் இல்லை

10.05.2016

Monday 9 May 2016

சோதனை மடல்

இது ஒரு சோதனை மடல் கருவி பட்டை இணைந்திருக்கிறதா என பார்க்க

ஒரு புதிய பாடம்

நீண்ட நாட்களாக டைரி எழுதாதது எனது ஒவ்வொரு நாளில் தியான அனுபவங்களை பதிவு செய்யாதது ஞாபகம் வந்தபின் இதை எழுதுகிறேன் .
திடீரென மிக அதிகமான கோபம் உணர்வு ஏற்பட்டதும் எனது பிரசெப்டரை அனுகினேன் அவரது  ஆலோசனை பேரில் நீண்ட நேரம் தியானம் செய்ய ஒத்து கொண்டபின் அந்த கோபத்தில் உணர்வு குறைய ஆரம்பித்தது
காரணம் - ஆன்மீக பயணத்தில் சில லேயர்களை கடக்கும் போது ஈகோ பாதிக்கப்படும் அதை ஏற்று கொள்ளாத ஈகோ அதை கோபமாக வெளிப்படுத்தும் என பிரசெப்டர் சொன்னது மிகவும் சரி
தினம் ஒரு கற்று கொள்ளல் என நகர்கிறது எனது பயணம் மெதுவாக


கோபம் :

பொதுவாக கோபம் நமது மனதின் மேல் தளத்திற்கு வருவது வரை நமக்கு தெரிவதில்லை ஆகவே தியானத்தின் மூலம் நமது உணர்வு நிலைக்கு வரும் முன்பு அதை உணர்ந்து கொள்ள மனம் நுட்பமாக வேண்டும் என்பதுதான் கோபத்தை கட்டு படுத்த ஒரே வழி

09.05.2016

Monday 18 April 2016

எனது டைரி 18.04.2016

குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இருக்கை அமர்வில் தியானம் தொடர்ச்சியாக ஒரு எண்ணெய் ஒழுக்கை போல மனதை குவிந்து பாய செய்கிறது
மனம் மேல் நோக்கி செல்வதையும் நமது எண்ணங்களின் மீதான ஆதிக்கம் இல்லாமல் போவதை உணரலாம்
எண்ணங்கள் ஒடுங்கிய பிறகு இருக்கும் அந்த விழிப்புணர்வு நிலை மிக குறைந்த நேரம் நம்மிடம் வருவதை உணர முடிகிறது இதுதான் சாய்ஸ்லெஸ் அவார்னெஸ் என ஜிட்டுவால் சொல்லப்படுகிறது என கருதுகிறேன்
எண்ணங்கள் ஒடுங்கிய பிறகு மனதை எதோ ஒன்று கவனிக்கிறது ஒரு சில எண்ணங்கள் இன்னும் இருப்பதை அறிய முடிகிறது ஆனால் அவை முழுமை பெற முடியாமல் தண்ணீரில் மேல் போட்ட கோலம் போல அழிந்து போய்விட்டது அகந்தை இல்லை
கவனிப்பு மட்டும் தொடர்கிறது ஆனால் அது காற்றில் ஆடாமல் இருக்கும் ஒரு மெழுகு தீபம் போல மிக சில மணித்துளிகள் இருப்பதே அபூர்வம்
மேலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் நிற்க செய்யலாம் போல

18.04.2016

Saturday 16 April 2016

எனது டைரி 15.04.2016

குறிப்பிட்ட நேரங்கள் மாஸ்டரால் அறிவிக்கப்பட்டுள்ளன  காலை 6.30 மற்றும் 8.00 மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் அதிக பட்ச உத்வேகம் அந்த நேரத்தில் பாய்கிறது இந்த காலங்களில் உக்கார்ந்து பார்த்தேன் எனது முயற்சி இன்றி தியான நிலைக்கு மனம் போவதை அறிய முடிகிறது.
அரசியல் :
தேர்தலுக்கான ஏற்பாடுகளை பார்த்து சிரிப்புதான் வருகிறது .  என்ன தேர்தல் நடத்தினாலும் ஏன் அடிப்படை பிரச்சனைகள் மாறுவதில்லை சாதி வேறுபாடு மற்றும் போராட்டம் வறுமை இதெல்லாம் ஏன் மாறுவதில்லை ஆன்மீக உலகில் இதற்கான பதில் இருக்கிறதா ?
குடும்பங்களின் நிலை :
தற்சமயம் குடும்பங்கள் தனிதனியாக பிரிந்து யாருக்கும் யாரும் பிரயோசனம் இல்லாமல் போய்கொண்டு இருக்கின்றன இதற்கு ஆன்மீகத்தில் தீர்வு இருக்கிறதா?

அரசியல் என்பது தனிநபர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்தி கொள்ளும் ஒரு அதிராக பண்பு கொண்ட அமைப்பு
குடும்பமும் அதே போலத்தான்
மன அமைப்பில் ஏற்படும் மாறுதல்களே இவற்றின் சீரழிவிற்கு காரணம்
தனிநபரின் பண்பு நலன்கள் ஒழுங்காக அமையும் போது அது மற்றவர்களுக்கு ஒரு வைரஸ் போல பரவுகிறது
தனிநபரின் பண்பு நலன்கள் சரியாக அமையாத போது அதுவும் மற்றவர்களால் பின்பற்ற படுகிறது
தனிநபர்களின் பண்பு நலன்களை மாற்ற முடியாத அமைப்பாகி விட்டது கல்வி அமைப்புகள் ஆகவே ஆன்மீகம்தான்  ஒரே உதவி புரியும் கருவி
அனைவரையும் ஆன்மீகத்தை நோக்கை ஈர்ப்பதை தவிர வேறு வழியே இல்லை

15.04.2016

எனது டைரி 11.04.2016

மனம் எண்ணங்களுடன் போராடுவது ஒரு எல்லைவரைதான் அழுது அழுது ஓய்ந்து போகும் ஒரு குழந்தைக்கு ஒப்பாக அது நின்று விடுகிறது எதோ ஓரிரு எண்ணங்கள் தூவாணம் விழுவது போல் அங்கொன்றும் இங்கொன்றும் வருகிறது
இதான் சமயம் மனதை பிடித்து வைத்து நான் யார் என்ற கேள்வியை கேட்க மனம் மேலும் மேலும் ஒடுங்கி அந்த மூல இடத்தில் நிற்கிறது அங்கேயே அதிக நேரம் நிற்க நிற்க நமது ஆன்ம பிரகாசம் அதிகமாகிறது பிறகு கீழிறங்கி வர மனம் ஒப்பவில்லை
கடந்த செப்டம்பரில் நான் எழுத ஆரம்பித்த போது தியானத்தையும் தொடங்கினேன்
எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகும் தொடர்வதற்கு இறைவன் அன்புதான் காரணம்
தொடர்ச்சியாக இறைவனிடம் இருந்து எனக்கு வழிகாட்டுதல் மற்ற நபர்களிடம் இருந்தோ மற்றவர்களின் கனவு மூலமோ வந்து கொண்டுதான் இருக்கிறது
என்ன தெரிகிறது என்றால் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நூறு அடி எடுத்து வைத்து நம்மை அணைத்து கொள்ள காத்திருக்கிறான்
இந்த மத எல்லைகள் தியானத்தின் ஆரம்பத்திலேயே நொறுங்கி விழுந்து விட்டது ஆச்சரியமே .

முன்பெல்லாம் கோபத்திற்கு பெரிதும் ஆளாவேன் மற்ற உணர்வுகளை சொல்லவே வேண்டியதில்லை இப்போது அது மிகவும்குறைந்து 5 சதவீதத்துக்கு வந்து விட்டது தியானத்தின் பெரும் பயன் இது

Friday 8 April 2016

எனது டைரி 08.04.2016



தியானத்தின் போது மனதின் ஓடும் எண்ணத்தின் பின்னால் நாம் செல்கிறோம் ஒரு இளைஞர் பதின்ம வயதில் பெண்களின் பின்னால் செல்வதற்கும் ஒரு குடிகாரன் மதுவை தேடி போவதற்கும் ஒப்ப
நமது மனம் தொடர்ச்சியாக எண்ணங்களை பின்பற்றி போகும்
அதற்கு எல்லையே இல்லை எத்தனை மணி நேரம் போனாலும் தியானம் கை கூடவே செய்யாது
ஏனெனில் மனம் எனும் ராட்டிணத்தில் ஏறிவிட்டோம் பிறகு அதுவே நின்று நம்மை இறக்கி விட்டால்தான் உண்டு
இப்போ எண்ணத்தை கவனி என்கிறார்கள்
ஒரு சின்ன டூல் கொடுக்கிறார்கள் கவனிக்க ஆரம்பிக்கிறோம்
ஒவ்வொரு எண்ணமாக அது முடியும் வரை கவனிக்க வேண்டும் ஆனால் மனம் அப்படி செய்யாமல் ஒரு எண்ணத்தின் மீது மற்றோரு எனண்ணத்தை படிய வைக்கிறது அறிகிறோமா ?
இந்த எண்ணம் முடிந்த்தும் மற்றொரு எண்ணம் தோன்றும் அதுவும் முடியட்டும் கொஞ்சம் கொஞ்சம் மாக இந்த எந்திரம் நின்றுவிடும்
ஏனெனில் அதற்கு சக்தி இல்லை அந்த சக்திதான் இப்போ கவனிக்க இறங்கிடுச்சே
எண்ணம் இல்லாட்டா மனம் ஏது மனம் தானே நாம்
எண்ணம் ஒழிய மனோ நாசம் ஏற்பட்டால் தூய ஆத்மா பிரகாசிக்கும் இதான் சுருக்கமான ஒரு விளக்க உரை
நம்ம கையில் இருப்பது எண்ணங்களை கவனித்தல் இந்த ஒரு விசயத்தை தவிர  உலகம் கடவுள் மனிதன் இதெல்லாம் விவாதிப்பதும் பேசுவத்உம் மேலும் மேலும் மனதில் எண்ணத்தை உண்டாக்கவும் தியான காலத்தில் இடைஞ்சல் செய்யவும் ஆரம்பிக்கிறது

விவாத்த்தில் எந்த உண்மையும் கண்டு பிடிக்க முடியாது ஏனெனில் விவாதம் என்பது எண்ணங்களை கொண்டு செய்யப்படும் விசயம் எண்ணத்தை வைத்து எதை செய்தாலும் அது குறைபாடு கொண்ட்து ஏனெனில் எண்ணம் என்பது பழைய பதிவுகளின் அடிப்படையில் மனம் உருவாக்கும் ஒரு விசயம்
ஆனால் விசயங்கள் புதியவை

Thursday 7 April 2016

எனது டைரி 06.04.2016

இன்றைய தியானம் மிக சிறப்பானது அதி சிறப்பானது ஏனெனில் இந்த நிலையை சொல்லால் விளக்க முடியவில்லை ஓயாமல் பேசிக்கொண்டும் அலைந்து கொண்டும் இருக்கும் மனம் தனியாக பிரிந்து நின்றதை உணர்ந்து கொள்ளும் நிலை அதி உன்னத மானது இறைவனுக்கு நன்றி
இன்று காலை முதல் மொத்தம் மூன்று முறை தியானத்தை முயற்சித்து சாயுங்கால தியானம் கூடி வந்தது குறித்து மகிழ்ச்சி
யேசுராஜன்
07.04.2016

எனது டைரி 06.04.2016

மேற்கண்ட புள்ளிகளை பற்றி பேசும்போது எனது பிரசெப்டர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி தியான காட்சிகள் பற்றி பேச ஆரம்பித்தார் காட்சிகள் எல்லாம் பொய் என்பது அவரது வாதம் ஆனால் வராது வந்த மாமணியாய் அமைந்த காட்சிகளை அவர் மறுப்பதை எனது மனம் ஏற்று கொள்ளவில்லை
தொடர்ந்து காட்சிகளும் அமையவில்லை என்பது வருத்தமான விசயம் இருந்தாலும் தொடர் முயற்சி பயனளிக்கும் அல்லவா?
தியான உலகம் என்பது முற்றிலும் தனிபட்டது குருவை தவிர சாதாரண மற்றொரு மனிதன் வழிகாட்ட ஆலோசனை சொல்லவே இயலாது இதை மனதில் கொண்டுதான் பேசவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்

 னிதன் தேடி தேடி ஓடி அலையும் விசயங்களான பணம் புகழ் மோகம் ஆக்கியன அவனை முன்னேற விடாமல் பிடித்து வைக்கின்றன

ஆனால் நாம் அதை உணரமாட்டோம் எங்கோ ஒரு கோயில் திண்ணையில் உக்கார்ந்திருக்கும் ஒரு யோகியை விட பரிணாம வளர்ச்சியில் கீழ் தட்டில் இருக்கும் ஒரு நபர்  காரில் சென்று கொண்டு இருக்கலாம்

ஆனால் அந்தோ அந்த மனிதன் பரிதாபத்துக்கு உரியவன் என்கிறார்கள் யோகிகள்





06.04.2016

எனது டைரி 02.04.2016

தியானத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் தியானம் என்பது எந்த விருப்பத்தையும் கொண்டிருக்க கூடாத ஒரு விசயம் என்பதை திரும்ப திரும்ப மனதுக்கு சொல்ல வேண்டியதிருக்கிறது

ஆசை என்பதை பொருத்தவரை நமது மனதில்  a , b , c என்ற மூன்று புள்ளிகள் இருக்கின்றன இது இடது மார்பின் நிப்பிலில் இருந்து இரண்டு இஞ்சு கீழே a அதிலிருந்து முறையே இரண்டு இஞ்சு இடைவெளியில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றன .
A - இந்த புள்ளியில் நமது ஆசைகள் உற்பத்தியாகின்றன எந்த ஒரு ஆசையும் இங்கு உற்பத்தி ஆகிறது
B - இந்த புள்ளியில் ஆசை நிறைவேற்றத்துக்கு தேவையான பதிவுகள் பதிவாகின்றன
C- இந்த புள்ளியில் ஆசை நிறைவேறினால் ஏற்படும் மகிழ்ச்சியும் அது நிறைவேறாவிட்டால் ஏற்படும் வலியும் பதிவாகின்றன
இந்த பதிவுகள் ஏற்படுத்தும் புள்ளிகள் மீது கிளீனிங் செய்வது ரொம்ப முக்கியமானது
ஏனெனில் எவ்வளவு அழங்காரமான பங்களாவாக இருந்தாலும் குப்பையை கூட்டி ஒதுக்கி அதை சுத்தமாக வைக்கவேண்டும் அது நமது கடமை
முதல் புள்ளியில் தொடர்ச்சியாக கவனிக்க நமது ஆசைகளை கண்டறியலாம் இரண்டாவது புள்ளியில் இருக்கும் பதிவுகளை வெளியேற்ற தினமும் இருபது நிமிடம் செலவு செய்து அந்த புள்ளி மீது கவனித்து தேவையற்ற ஆசைகள் வெளியேறுவதாக நினைக்க வேண்டும் மற்றபடி மத்த புள்ளிகள் ஆக்டிவேட் ஆகும் போது நமது உணர்வு நினை வளர்ந்து விடும் பிறகு நமக்கு அறியாமல் ஆசைகள் கோபம் காமம் உருவாகாது
இதை பயிற்சி செய்கிறேன் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்
யேசுராஜன்
02.04.2016

எனது டைரி 31.03.2016

நேற்று அந்த பெண் பிரசப்டர் பேசிய விசயங்கள் மனதில் பதிந்து போயின பிராத்தனையை ஒரு கருவியாக்கி அதையே ஆயுதமாக்கி நமது மனதின் மீது எப்படி பிரயோகிப்பது என்பதை சொல்லி கொடுத்தார்
வாழ்க அவர்
ஒரு சிலர் இருக்கிறார்கள் பயன்கருதாது மற்றவர்களுக்கு எதாகிலும் நல்லது செய்யனும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலை செய்வார்கள் அதை போன்ற பெண்மணி இவர்
மதியம் சாப்பாடு எடுத்து வீட்டு காரருக்கு வைத்து விட்டு நான் வருவேனே விளக்கம் கொடுக்கனுமே என தியான செண்டருக்கு ஓடி வந்திருக்கிறார்

நல்ல மனம் வாழ்க ------------------ 
ஆண்டவனை அறிந்து கொள்ள அவன் பாதையில் செல்ல எத்தனை தடைகள் வந்தாலும் அதை நிவர்த்தி செய்து நம்மை அழைத்து செல்பவனும் அவனே
என்ற நம்பிக்கை மட்டுமே  அந்த டார்ச்சை மட்டுமே வைத்து கொண்டு முன்னேறுகிறேன்
யேசுராஜன்
31.03.2016

எனது டைரி 30.03.2016

என்னதான் நமது தந்தை அன்பானவர் சிறப்பானவர் உலகை படைத்தவர் என்றாலும் அவரை நான் தியானிக்கிறேன் என சொல்லி கொண்டாலும் அவரது அருமையான போற்றதக்க குணங்களில் ஒன்று மன்னிக்கும் குணம் அது என்னிடம் இருக்கிறதா என சோதித்து பார்த்துகொண்டேன் அது இல்லை என்பதுதான் உண்மை
உடனே அதற்கான பிரேயரை ஆரம்பிக்கனும் ஏனெனில் பிரேயர் இது ஒன்றுதான் வழி வேற வழியே இல்லை நான் யாரை எல்லாம் துன்புறுத்தி இருக்கிறேனோ மனதான் சொல்லால் செயலால் அவர்களுக்காக மன்னிப்பை கோரும் பிரேயரை தொடங்கிய உடனே அப்போ நம்மை துன்புறுத்தியவர்கள் சரியாக செய்தார்களா என்கிற எண்ணமே
ஆனால் காலத்தின் தூரத்துக்கு எட்டாத நமது பரிணாம வளர்ச்சியில் நாம் செய்த செயல்களின் பதிவுகள் நம்முடைய ஆழ்மனதில் உள்ளன அவற்றிக்கு ஏற்பவே நமது சுபாவம் அமைகிறது நமது சுபாவத்தை மாற்றுவது குதிரை கொம்பான செயலாகும்
ராமா ராமான்னு கத்துகின்ற கிளி வேடன் வந்ததும் கீ கீன்னு கத்தும்னு ராமகிருஸ்ணர் சொல்வதை போல
அமைதி தியானம் இதெல்லாம் இருந்தாலும் நமது கட்டுப்பாட்டை இழந்து நிலை தவறி விடும்போது
நமது மனம் இன்னும் விலங்கின் நிலையை விட்டு சிறிதுதான் உயர்ந்துள்ளது என்கிற நினைப்பு வருகிறது
எனவே பிரேயர் கம் தியானம் என்கிற விசயத்தை எனது பிரசப்டருடன் பேசி விட்டு தொடங்க ஆரம்பித்து இருக்கிறேன்
யேசுராஜன்
30.03.2016

எனது டைரி 28.03.2016

யார் மிகவும் அன்பானவர்கள் அன்னையா அப்பனா என்றால் குழந்தைகள் அன்னை என்றுதான் சொல்லும் ஆனால் அந்த சிவனோ அப்படி அல்ல அவன் அம்மையப்பன் - தாயுமாகி நின்றவன் அவர் விசயத்தில் அப்படி பட்ட கோடுகள் இல்லை
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
நான் பொய் என் நெஞ்சும் பொய் என்பது எப்படி பட்ட ஒரு உண்மை நான் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் குறுகிய நான் நெஞ்சோ நேரத்துக்கு தகுந்தாற்போல் வேடம் பூணும் அதிலிருக்கும் அன்போ எதேனும் வியாபார புத்தியோடு இறைவனை நாடும் அதனால் இதெல்லாம் பொய் என்கிறார் ஆனால் அழுதால் உன்னை பெறலாமே என்கிறது ஒரு குழந்தை பாவம்
நான் அழுதால் என் தாயாகிய தந்தை ஓடோடி வருவான் என்பது அளவிட முடியாத அன்புநிலை
இத்தனை மூச்சை இழுத்து இத்தனை நொடி நிறுத்தி இத்தனை முறை விடுதல் வேண்டும் சக்கரங்களின் மனதை நிறுத்தல் வேண்டும் இத்தனை நியமம் இத்தனை ஆசனம் என்பதெல்லாம் தேவையே இல்லை
அழுதால் உன்னை பெறலாமே
யாராவது அழுதிருக்கிறோமா நான் அழுதிருக்கிறேனா - உண்மையில் ஆண்டவனை காண விரும்பி அழுதிருக்கிறேனா என யோசித்தி பார்கிறேன் இல்லை என்ற பதில்தான் வருகிறது
யேசுராஜன்
28.03.2016

எனது டைரி 25.03.2016

மாயை என்கிறோமே அந்த மாயை என்பதுதான் என்ன நமது மனம்தானே அது நாமே நமக்கு ஏற்படும் எண்ணங்களில் இருந்து விடுபட முடியவில்லை என்றால் நம்மை யார்தான் காப்பாற்ற இயலும்
மேல் மனம் ஆழ் மனம் என்கிற இரண்டு விதமான மனமாக ஒரு பேச்சுக்கு அதை பிடித்து பார்த்தால்
ஆழ்மனதின் வெளிப்பாடுதான் நமது சிந்தனை பேச்சு செயல் எல்லாமே
இந்த ஆழ்மனம் என்பது வேறொன்றும் அல்ல நமது நனவு மனதின் சில விசயங்கள் பதிந்து போய் அழுத்தமான
விசயமாக ஆழ்மனதில் பதிவு பெற்று விடுகிறது அந்த ஆழ்மனதின் கட்டளைகளை நமது மேல் மனம் விழிப்பின்றி பின்பற்றுகிறது
தொடர் தியானத்தின் மூலம் ஆழ்மனதை கண்ரோலுக்கு கொண்டு வரலாம்
ஆழ்மனதை நாம் பார்க்க பார்க்க நம்மை வெளியே பார்ப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் நீண்ட நேரம் பார்த்து கொண்டே இருப்பார்கள்
ஏனெனில் ரொம்ப ஆழ்மனது என்பது அவர்கள் மனதை தொடும் இடங்களும் இருப்பதால் தான்
யேசுராஜன்
25.03.2016

Tuesday 22 March 2016

எனது டைரி 22.03.2016

மாயை தியான வாழ்வை ஒவ்வொரு கனமும் அடித்து நொறுக்க பார்க்கிறது விழிப்புற்ற மனம் அதை உணரமுடியும் ஆனால் இந்த விழிப்பு நிலை பல படித்தரம் உடையது ஆழ் மனதில் ஏற்படும் கோபமோ காமமோ ஆசையோ மேல் மனதில் உணரப்படும் வரை சிலருக்கு தெரிவதில்லை
ஆனால் சம்ஸ்காரங்களை அசைவை கூட கண்டறிய கூடிய யோகி அதை அறிந்து அந்த எண்ணத்தை நசுக்கி போடுகிறான்
ஆனால் விழுந்தாலும் எழுந்து நின்று போராடு என்கிறார் எனது குரு
ஒவ்வொரு தரம் விழும் போதும் நமக்கு படிப்பினை கிடைக்கிறது எழுவதற்கு ஊக்கம் கிடைக்கிறது குருவருள் கிடைக்கிறது என்பதுதான் கடவுளின் கருணை
பாசாங்கு செய்யும் இந்த கள்ள மனம் சொல்கிறது இன்றைக்கு விடுப்பு எடுத்து விடலாம் தியானம் செய்யாமல் என சொல்கிறது அல்லது வேறு கேளிக்கைகளில் மனதை செலுத்துகிறது
உடனே ஆத்ம விசாரம் என்ற ஆயுதத்தை எடுக்கனும் தொடர்ந்து அந்த பாசாங்கை விரட்டனும்
இது கோட்டைக்குள் இருக்கும் ஒவ்வொரு எதிரியும் வெளியே வரும் வரை தொடரனும்

22.03.2016
என்

எனது டைரி 21.03.2016

என்னதான் அமைதியாக இருக்க நினைத்தாலும் மரத்தை காற்று விடுவதில்லை அசைக்கிறது அசைத்து அசைத்து அதை வேறோரு பிடிங்கு எறிந்துவிட முனைகிறது
ஆனால் மரம் ஒரு நெகிழ்வு தன்மையோடு காற்றுடன் போராடினால் உடையாது தப்பிக்கிறது
அந்த காற்று சென்று வர மரத்தில் சில துளைகளை இடுகிறோம்
ஒரு இசை பிறக்கிறது அந்த இசையை கண்டு காற்றே அசந்து போகிறது இவன் யாரோ வித்தை காரன் என ஸ்தம்பிக்கிறது
எதார்த்த வாழ்வு எதார்த்த சிந்தனை எதார்த்த பேச்சு எந்தெல்லாம் வெகுளித்தனம் என கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் இந்த உலகத்தில் மூங்கில் மரம்போல  இசைவோடுவும் அதை வெளியே தள்ள நம்மிடம் துளைகளோடும்
இருந்து விட்டால் காற்றால் நமக்கு பேரிடைஞ்சல் இல்லை
காற்றை இழு உள்வாங்கு அதை கவனி பிறகு கவனிக்காதே  இதோ அது
என்னை எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைகிறது
யேசுராஜன்

21.03.2016

Saturday 19 March 2016

எனது டைரி 19.03.2016

எனது எழுத்துக்கள் எங்கும் யாராலும் மட்டறுத்தவோ தடை செய்ய படவோ கூடாது என நினைக்கிறேன் அப்படி பயந்து கொண்டு ஏன் எழுதவேண்டும்

யாரோ ஒரு சிலர் படித்தாலும் அதனால் என்ன ? எண்ணிக்கையில் நிறைய பேர் படிப்பது குமுதம் பத்திரிக்கைதான்

எண்ணிக்கை குறைவு என்பதெல்லாம் பிரச்சனை இல்லை

எனது டைரியை படிப்பவர்கள் இங்கேயே கருத்தை சொல்லுங்கள்

தியானம் தொடர்கிறது , குறிப்பிடத தக்க முன்னேற்றங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை எப்படி குறிப்பிடுவது என தெரியவில்லை

நான் ஆத்மா என்கிற நினைப்புக்கும் உண்மையில் நான் ஆத்மா என்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்கிறேன்

தொடருவோம்

19.03.2016

Wednesday 16 March 2016

எனது டைரி 21.01.2016

இந்த சில நாட்கள் நான் டைரி எழுதவில்லை என்பது வருத்தமான விசயமே
ஏனெனில் நான் தியானமும் அரைகுறையாகவே செய்கிறேன்
தியானத்தின் அருமை அதை செய்யாத நாட்களில்தெரிகிறது


யேசுராஜன்
21.01.2016

எனது டைரி 18.01.2016

எதையுமே அளவா செய்யனும் என்பது எனக்கு புரிந்தது தை பொங்கல் முடிந்ததுதாம்
சும்மாதானே இருக்கிறோம் என நினைத்து உடலை பலப்படுத்துகிறேன்னு அதிகமா எக்செர் சைஸ் செய்தேன்
வழக்கமா 20 தண்டால் எடுப்பேன் அன்னைக்கு 60 எடுத்தேன் பிறகு பஸ்கி  ,ஆம்ஸ் பயிற்சிகள் எடுத்து விட்டு
சாப்பிட்டு தூங்கி எழுந்ததும் காய்ச்சல் வந்ததுதான் மிச்சம்

யேசுராஜன்

18.01.2016

எனது டைரி 11.01.2016

தியான வாழ்வு என்பது நடைமுறை அலைகள் நிறைந்த மனதுடன் நடக்கும் போராகும்
அலைகள் அமைதியானபின் மனதை பார்பதே ஒரு இன்பமான காட்சி
நான் மட்டுமே இருப்பதும் வேறு எந்த எண்ணமும் வராமல் இருப்பதும் ஒரு சில நொடிகள் அமைவதற்கு
ஒரு மணி நேரம் தியானம் செய்தாக வேண்டும்
பிறகு மனதுக்குள் அலை அலையாக இன்ப உணர்வு பெருக்கெடுக்கும்

யேசுராஜன்
11.01.2016

எனது டைரி 03.01.2016

ஆன்மீகம் என்பது முற்றிலும் ரகசியமானது என்கிறார்கள் ஆனால் அது ஏட்டளவில் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் உண்டான விசயமல்ல
முதலில் பயிற்சி அல்லது நடைமுறை எப்போதாவது பேச்சு இதான் ஆன்மீகம் என்பது தாழ்மையான எனது கருத்து

தியானம் என்பது பற்றி சுமார் 1000 புத்தகம் தமிழில் எழுத பட்டிருக்கலாம் ஆனால் இதையெல்லாம் படித்தால் தியானம் செய்யவே முடியாது
சுமார் 200 மணி நேரங்கள் தன் வாழ்வில் தியானம் செய்து பார்க்காத யாரும் தியானத்தின் வாசலில் நுழைய வே முடியாது
சரி
மனதை துரியத்தில் நிலைப்படுத்துவதில் ஒரு நல்ல விளைவு ஏற்பட்டது
வேலைகளை அதீத சுறுசுறுப்புடன் செய்கிறேன்
யேசுராஜன்

எனது டைரி 31.12.2015

நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது

நான் யாரென்று நீ நினைக்கிறாய் ,
 ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
 மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
எந்த முகவரியும் இல்லாத
தேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
 என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
 என் அம்மாவின் விழித்தல் அது

-யேசுராஜன்

எனது டைரி 28.12.2015

நெற்றில்யில் ஏற்றி வைக்கப்பட்ட அந்த உணர்வு அதாவது குண்டலினி சக்தி துரிய நிலைக்கு உயர்த்தப்பட்டது (27/12/2015)
என்னுடன் சுமார் 35 பேர் இந்த தீட்சை எடுத்து கொண்டார்கள் தலையில் மேல்பகுதியில் ஏற்கனவே தீட்சை வாங்கிய மூத்த சாதகர்கள் தொட்டு உணர்த்தி காண்பித்தார்கள்
இதன் மூலம் - அடுத்த கட்ட தியானத்தை நோக்கி நகர்கிறேன்
இந்த தியானத்தின் மூலம் வினை பதிவுகள் அழியுமாம்

எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சியில் ஒன்பது தவமுறைகள் உள்ளன.
1. ஆக்கினைத் தவம் 2. சாந்தி தவம் 3. துரிய தவம் 4. துரியாதீதத் தவம் 5. பஞ்சேந்திரிய தவம் 6. பஞ்சபூத நவக்கிரகத் தவம் 7. ஒன்பது மையத் தவம் 8. நித்தியானந்த தவம் 9. இறைநிலைத் தவம் Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
நான் மூன்றாவது படியை செய்து கொண்டு இருக்கிறேன்
யேசுராஜன்

எனது டைரி 25.12.2016

தொடர்சியாக மனதை குவிய செய்வதில் வெற்றி பெற்றேன் என சொல்ல முடியாது 
ஆனால் ஒரு புள்ளியை சுமார் ஒரு மணி நேரம் சுற்றி வர மனம் பழகி கொண்டது
அதன் ஒரு புள்ளியில் அது லயிக்கும் போது ஒரு சந்தோசம் மனதில் நிறைகிறது
முகத்தில் அந்த அமைதியில் சாயல் எதோ தெரியும் போல
எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் முகம் வாடாமல் இருக்கிறதே என
நண்பர்கள் கேட்டு விட்டார்கள்
இந்தியாவின் கலை தியானம் வாழ்க

Monday 14 March 2016

அறிந்ததினின்றும் விடுதலை -ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி

அறிந்ததினின்றும் விடுதலை
மனிதன் ஆண்டாண்டு காலமாக தனக்கு அப்பாற்பட்ட ,பொருளாதாய வாழ்வுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே வந்துள்ளான் .
அவற்றை நாம் இப்படி அழைக்கிறோம் கடவுள் , அல்லது உண்மை அல்லது காலம் கடந்த நிலை –எண்ணத்தாலோ சூழலால் தாக்கப்படாத மாறுபடாத நிலை .

மனிதன் எப்போதுமே கேட்டுவந்துள்ள கேள்விகள் .இதெல்லாம் எதற்காக ? இந்த வாழ்வில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? . வாழ்வில் மிக அதிக குழப்பத்தை அல்லது குழம்பி போன நிலை, மிருகத்தனமான போர்கள் ,கிளர்ச்சிகள், முடிவற்ற பிரிவுகள் கொண்டுள்ள மதம்,லட்சியங்கள் மற்றும் தேசாபிமானம் .மிக ஆழ்ந்த நுண்ணுணர்வுடன் இதை உணர்ந்து இந்த கேள்வியை கேட்கிறான் . ஒரு மனிதன் என்ன செய்யவேண்டும் . வாழ்க்கை என நாம் அழைப்பதற்கு பொருள்தான் என்ன?  இந்த வாழ்வுக்கு மேற்பட்டு எதாவது உள்ளதா?
ஆயிரம் பெயர்கள் கொண்ட அந்த பெயரற்ற ஒன்றை கண்டறிய முயன்றிருக்கிறான் . ஒரு மீட்பரின் மேலோ அல்லது லட்சியத்தின் மீதோ நம்பிக்கையை வளர்த்து வந்துள்ளான் ஆனால் நம்பிக்கை தவிர்க்க முடியாமல் வன்முறையை வளர்க்கிறது.

பல நூற்றாண்டுகளாக நாமெல்லாம் நமது ஆசிரியர்கள் ,மற்றும் மகான்கள் , புத்தகங்களால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். நாம் இந்த மலைகளுக்கும் கடலுக்கும் அப்பால் மேலும் இந்த பூமிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று கேட்டால் அவர்கள் தரும் விளக்கங்களை கேட்டு நாம் திருப்தியடைகிறோம் அதாவது நாம் வார்த்தைகளில் வாழ்கிறோம் நமது வாழ்க்கை; ஆழமற்றதாகவும் ஒரு காலி டப்பாவாக இருக்கிறது. நாம் இரண்டாந்தர மனிதர்கள் (second hand people). நாம் வாழ்வது நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை பற்றிகொண்டு குறுகிய வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை ,ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் வற்புறுத்தி ஏற்றுகொள்ள செய்யப்பட்ட வாழ்முறையில் வாழ்ந்து வருகிறோம்.
நாம் என்பது அனைத்து வகையான நம்பிக்கைகள் கருத்துக்களின் விளைவு தானே தவிர நம்மிடம் புதுமையானதென்று ஏதுமில்லை ,நாமே கண்டறிந்தது ஒரிஜினலானது என்று ஏதுமில்லை நம்மிடம்.

யாலாஜிகல் சொசைட்டியின் ஆன்மீக தலைவர்கள் மூலம் நாம் இன்னின்ன
சடங்குகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சில மந்திரங்களை திருப்பி திருப்பி சொல்ல வேண்டும் என்றும் பிராத்தனைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் ,நமது இயற்க்கை உந்துதல்கள் அதனால் ஏற்படும் ஆசைகள் ,காமம் ஆகியவற்றை அடக்கி ஒடுக்கவேண்டும் என ஆண்டாண்டுகாலமாக கற்பிக்கப்பட்டுள்ளது . பொதுமான அடக்குமுறையை மனமும் உடலும் அடைந்த பிறகு நாம் இந்த சின்னஞ்சிறிய வாழ்க்கைக்கு மேலுள்ள ஒன்றை அடைவோம் என சொல்லப்படுகிறது . இதைத்தான் மில்லியன்கணக்கான ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்பட்டவர்கள் பல தலைமுறைகளாக செய்திருக்கிறார்கள். காடுகளுக்கு ஓடிவிடுவதோ அல்லது சின்ன திருவோட்டை ஏந்தி பிச்சை எடுத்து வாழ்வதோ அவர்களது வாழ்க்கை முறையாக உண்மையை தேட, சாமியார் மடங்களில் சேர்ந்து விடுவதோ அல்லது ஒரு குரூப்பாக சேர்ந்து தமது மனதை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்ட முள்ள வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி கொள்ளவோ செய்கிறார்கள். ஆனால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மனம் ஒரு உடைந்துபோன மனமாகும் எது வெளி உலகத்தை வேண்டாம் என்று ஒதுக்கி மிகவும் சோர்வடைந்த மனம்(which has denied the outer world and been made dull
through dis- cipline and conformity -) எவ்வளவுதான் புனிதமடைந்ததாக காட்டி கொண்டாலும் அது உண்மையை அதற்குரிய வழியில் (உடைந்து போனதை போலவே) காணும் .( however long it
seeks, will find only according to its own distortion.)

Monday 15 February 2016

தமிழ் எதிர்பாளருக்கு கண்டனம்

மிஸ்டர் ஐயப்பன் தாங்கள் தவறுதலாக இங்கே மின் தமிழில் வந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
தமிழனை தாக்கி பேசியது நீங்கள் என்று சொல்லவில்லை மேலும் பண்புடன் குழுமத்தையே நான் மறந்து விட்டேன்
நீங்கள் அங்கே என்ன எழுதினாலும் எனக்கு வராது மேலும்
உங்களுக்கு பதிலளித்து கொண்டிருக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை  பொதுவாக
தமிழனை தாழ்த்தி பேசும் யாராக இருந்தாலும் இந்த மடல் பொருந்தும் (உமக்கு பொருந்துமென்றால் நான் என்ன செய்வது )
நீவீர் தாழ்த்தி பேசி இருந்தால் கண்டனங்கள்

பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் ஏட்டில் எழுதப்பட்ட வரலாறுகளுக்கு முந்தைய காலத்தில் தென்குமரி கடலில் லெமூரியா கண்டம் இருந்தது அங்கிருந்தான் மனித சமூகமே தோன்றியது என்பதெல்லாம் கருது கோள்கள் கோட்பாடுகளே
அவற்றை அப்போது படமெடுக்க அதற்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை
மேதகு அய்யா உணர்ந்து கொள்வராக
அந்த கோட்பாட்டின் அடிப்படையில் பேசும் தமிழனை இழித்தும் பழித்தும் பேசும் நீவீர் யார்
உமது மொழி என்ன (தமிழனென்று தயவு செய்து பகரவேண்டாம் )
என்பதை கேட்கவும் உம்மை போன்றவர்களை அம்பலப்படுத்தவும்
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு யாம் வேண்டுதல் விடுப்பதில் என்ன தவறு

//
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
  • இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.//

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

தமிழ் பற்றும் கடமையும்

பொதுவாக இணைய வெளியில் தமிழ் உணர்வு மேலோங்கி வருகிறது
தமிழனாக இருந்தால் இதை பகிரவும் என்றெல்லாம்
ஒரு ஆர்வமிகுதியால் இவ்வாறு எழுதுகிறார்கள் எனினும் தமிழன் பெருமையை பேசுமிடத்து சிலருக்கு எரிச்சல் வருவதை தவிர்க்க இயலாது
தமில்ன்னு எழுதுபவனெல்லாம் தமிழின் பெருமை பேசுகிறான் என்றும் அவனெல்லாம் மொண்ணை தமிழனென்றும் எழுதி வருகிறார்கள்
அவர்களுக்கு எனது பதில் இதுதான்
தமிழ் என்கிற தாய்க்கு அவளது மகனின் சிறு தவறுகள் பெரிய விசயமில்லை அதை அவர்கள் திருத்தி கொள்வார்கள்
ஆனால் நீங்கள் உங்கள் மொழியின் வளத்தை எழுதுங்கள் அதை தமிழோடு ஒப்பிட்டோ ஒப்பிடாமலோ உங்களுக்கென்று மொழி இருப்பின் அதை எழுதுங்கள் பேசுங்கள்
ஆனால் தமிழன் பெருமையை பேசாமல் தடுக்காதீர்கள்
ஏனெனில் ஒரு நாடு அதன் மொழியை இழந்து விட்டால் அவர்களை
காப்பாத்த யாராலும் முடியாது
ஆகவே மொழியில் தவறு செய்கிறார்கள் எழுத்தில் தவறு செய்கிறார்கள் என சொல்லி நீவீர் துரோகம் புரியாதீர்
புரிதலுக்கு நன்று
தமிழ் நேசன்
யேசுராசன்