Monday 18 April 2016

எனது டைரி 18.04.2016

குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இருக்கை அமர்வில் தியானம் தொடர்ச்சியாக ஒரு எண்ணெய் ஒழுக்கை போல மனதை குவிந்து பாய செய்கிறது
மனம் மேல் நோக்கி செல்வதையும் நமது எண்ணங்களின் மீதான ஆதிக்கம் இல்லாமல் போவதை உணரலாம்
எண்ணங்கள் ஒடுங்கிய பிறகு இருக்கும் அந்த விழிப்புணர்வு நிலை மிக குறைந்த நேரம் நம்மிடம் வருவதை உணர முடிகிறது இதுதான் சாய்ஸ்லெஸ் அவார்னெஸ் என ஜிட்டுவால் சொல்லப்படுகிறது என கருதுகிறேன்
எண்ணங்கள் ஒடுங்கிய பிறகு மனதை எதோ ஒன்று கவனிக்கிறது ஒரு சில எண்ணங்கள் இன்னும் இருப்பதை அறிய முடிகிறது ஆனால் அவை முழுமை பெற முடியாமல் தண்ணீரில் மேல் போட்ட கோலம் போல அழிந்து போய்விட்டது அகந்தை இல்லை
கவனிப்பு மட்டும் தொடர்கிறது ஆனால் அது காற்றில் ஆடாமல் இருக்கும் ஒரு மெழுகு தீபம் போல மிக சில மணித்துளிகள் இருப்பதே அபூர்வம்
மேலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் நிற்க செய்யலாம் போல

18.04.2016

Saturday 16 April 2016

எனது டைரி 15.04.2016

குறிப்பிட்ட நேரங்கள் மாஸ்டரால் அறிவிக்கப்பட்டுள்ளன  காலை 6.30 மற்றும் 8.00 மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் அதிக பட்ச உத்வேகம் அந்த நேரத்தில் பாய்கிறது இந்த காலங்களில் உக்கார்ந்து பார்த்தேன் எனது முயற்சி இன்றி தியான நிலைக்கு மனம் போவதை அறிய முடிகிறது.
அரசியல் :
தேர்தலுக்கான ஏற்பாடுகளை பார்த்து சிரிப்புதான் வருகிறது .  என்ன தேர்தல் நடத்தினாலும் ஏன் அடிப்படை பிரச்சனைகள் மாறுவதில்லை சாதி வேறுபாடு மற்றும் போராட்டம் வறுமை இதெல்லாம் ஏன் மாறுவதில்லை ஆன்மீக உலகில் இதற்கான பதில் இருக்கிறதா ?
குடும்பங்களின் நிலை :
தற்சமயம் குடும்பங்கள் தனிதனியாக பிரிந்து யாருக்கும் யாரும் பிரயோசனம் இல்லாமல் போய்கொண்டு இருக்கின்றன இதற்கு ஆன்மீகத்தில் தீர்வு இருக்கிறதா?

அரசியல் என்பது தனிநபர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்தி கொள்ளும் ஒரு அதிராக பண்பு கொண்ட அமைப்பு
குடும்பமும் அதே போலத்தான்
மன அமைப்பில் ஏற்படும் மாறுதல்களே இவற்றின் சீரழிவிற்கு காரணம்
தனிநபரின் பண்பு நலன்கள் ஒழுங்காக அமையும் போது அது மற்றவர்களுக்கு ஒரு வைரஸ் போல பரவுகிறது
தனிநபரின் பண்பு நலன்கள் சரியாக அமையாத போது அதுவும் மற்றவர்களால் பின்பற்ற படுகிறது
தனிநபர்களின் பண்பு நலன்களை மாற்ற முடியாத அமைப்பாகி விட்டது கல்வி அமைப்புகள் ஆகவே ஆன்மீகம்தான்  ஒரே உதவி புரியும் கருவி
அனைவரையும் ஆன்மீகத்தை நோக்கை ஈர்ப்பதை தவிர வேறு வழியே இல்லை

15.04.2016

எனது டைரி 11.04.2016

மனம் எண்ணங்களுடன் போராடுவது ஒரு எல்லைவரைதான் அழுது அழுது ஓய்ந்து போகும் ஒரு குழந்தைக்கு ஒப்பாக அது நின்று விடுகிறது எதோ ஓரிரு எண்ணங்கள் தூவாணம் விழுவது போல் அங்கொன்றும் இங்கொன்றும் வருகிறது
இதான் சமயம் மனதை பிடித்து வைத்து நான் யார் என்ற கேள்வியை கேட்க மனம் மேலும் மேலும் ஒடுங்கி அந்த மூல இடத்தில் நிற்கிறது அங்கேயே அதிக நேரம் நிற்க நிற்க நமது ஆன்ம பிரகாசம் அதிகமாகிறது பிறகு கீழிறங்கி வர மனம் ஒப்பவில்லை
கடந்த செப்டம்பரில் நான் எழுத ஆரம்பித்த போது தியானத்தையும் தொடங்கினேன்
எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகும் தொடர்வதற்கு இறைவன் அன்புதான் காரணம்
தொடர்ச்சியாக இறைவனிடம் இருந்து எனக்கு வழிகாட்டுதல் மற்ற நபர்களிடம் இருந்தோ மற்றவர்களின் கனவு மூலமோ வந்து கொண்டுதான் இருக்கிறது
என்ன தெரிகிறது என்றால் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நூறு அடி எடுத்து வைத்து நம்மை அணைத்து கொள்ள காத்திருக்கிறான்
இந்த மத எல்லைகள் தியானத்தின் ஆரம்பத்திலேயே நொறுங்கி விழுந்து விட்டது ஆச்சரியமே .

முன்பெல்லாம் கோபத்திற்கு பெரிதும் ஆளாவேன் மற்ற உணர்வுகளை சொல்லவே வேண்டியதில்லை இப்போது அது மிகவும்குறைந்து 5 சதவீதத்துக்கு வந்து விட்டது தியானத்தின் பெரும் பயன் இது

Friday 8 April 2016

எனது டைரி 08.04.2016



தியானத்தின் போது மனதின் ஓடும் எண்ணத்தின் பின்னால் நாம் செல்கிறோம் ஒரு இளைஞர் பதின்ம வயதில் பெண்களின் பின்னால் செல்வதற்கும் ஒரு குடிகாரன் மதுவை தேடி போவதற்கும் ஒப்ப
நமது மனம் தொடர்ச்சியாக எண்ணங்களை பின்பற்றி போகும்
அதற்கு எல்லையே இல்லை எத்தனை மணி நேரம் போனாலும் தியானம் கை கூடவே செய்யாது
ஏனெனில் மனம் எனும் ராட்டிணத்தில் ஏறிவிட்டோம் பிறகு அதுவே நின்று நம்மை இறக்கி விட்டால்தான் உண்டு
இப்போ எண்ணத்தை கவனி என்கிறார்கள்
ஒரு சின்ன டூல் கொடுக்கிறார்கள் கவனிக்க ஆரம்பிக்கிறோம்
ஒவ்வொரு எண்ணமாக அது முடியும் வரை கவனிக்க வேண்டும் ஆனால் மனம் அப்படி செய்யாமல் ஒரு எண்ணத்தின் மீது மற்றோரு எனண்ணத்தை படிய வைக்கிறது அறிகிறோமா ?
இந்த எண்ணம் முடிந்த்தும் மற்றொரு எண்ணம் தோன்றும் அதுவும் முடியட்டும் கொஞ்சம் கொஞ்சம் மாக இந்த எந்திரம் நின்றுவிடும்
ஏனெனில் அதற்கு சக்தி இல்லை அந்த சக்திதான் இப்போ கவனிக்க இறங்கிடுச்சே
எண்ணம் இல்லாட்டா மனம் ஏது மனம் தானே நாம்
எண்ணம் ஒழிய மனோ நாசம் ஏற்பட்டால் தூய ஆத்மா பிரகாசிக்கும் இதான் சுருக்கமான ஒரு விளக்க உரை
நம்ம கையில் இருப்பது எண்ணங்களை கவனித்தல் இந்த ஒரு விசயத்தை தவிர  உலகம் கடவுள் மனிதன் இதெல்லாம் விவாதிப்பதும் பேசுவத்உம் மேலும் மேலும் மனதில் எண்ணத்தை உண்டாக்கவும் தியான காலத்தில் இடைஞ்சல் செய்யவும் ஆரம்பிக்கிறது

விவாத்த்தில் எந்த உண்மையும் கண்டு பிடிக்க முடியாது ஏனெனில் விவாதம் என்பது எண்ணங்களை கொண்டு செய்யப்படும் விசயம் எண்ணத்தை வைத்து எதை செய்தாலும் அது குறைபாடு கொண்ட்து ஏனெனில் எண்ணம் என்பது பழைய பதிவுகளின் அடிப்படையில் மனம் உருவாக்கும் ஒரு விசயம்
ஆனால் விசயங்கள் புதியவை

Thursday 7 April 2016

எனது டைரி 06.04.2016

இன்றைய தியானம் மிக சிறப்பானது அதி சிறப்பானது ஏனெனில் இந்த நிலையை சொல்லால் விளக்க முடியவில்லை ஓயாமல் பேசிக்கொண்டும் அலைந்து கொண்டும் இருக்கும் மனம் தனியாக பிரிந்து நின்றதை உணர்ந்து கொள்ளும் நிலை அதி உன்னத மானது இறைவனுக்கு நன்றி
இன்று காலை முதல் மொத்தம் மூன்று முறை தியானத்தை முயற்சித்து சாயுங்கால தியானம் கூடி வந்தது குறித்து மகிழ்ச்சி
யேசுராஜன்
07.04.2016

எனது டைரி 06.04.2016

மேற்கண்ட புள்ளிகளை பற்றி பேசும்போது எனது பிரசெப்டர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி தியான காட்சிகள் பற்றி பேச ஆரம்பித்தார் காட்சிகள் எல்லாம் பொய் என்பது அவரது வாதம் ஆனால் வராது வந்த மாமணியாய் அமைந்த காட்சிகளை அவர் மறுப்பதை எனது மனம் ஏற்று கொள்ளவில்லை
தொடர்ந்து காட்சிகளும் அமையவில்லை என்பது வருத்தமான விசயம் இருந்தாலும் தொடர் முயற்சி பயனளிக்கும் அல்லவா?
தியான உலகம் என்பது முற்றிலும் தனிபட்டது குருவை தவிர சாதாரண மற்றொரு மனிதன் வழிகாட்ட ஆலோசனை சொல்லவே இயலாது இதை மனதில் கொண்டுதான் பேசவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்

 னிதன் தேடி தேடி ஓடி அலையும் விசயங்களான பணம் புகழ் மோகம் ஆக்கியன அவனை முன்னேற விடாமல் பிடித்து வைக்கின்றன

ஆனால் நாம் அதை உணரமாட்டோம் எங்கோ ஒரு கோயில் திண்ணையில் உக்கார்ந்திருக்கும் ஒரு யோகியை விட பரிணாம வளர்ச்சியில் கீழ் தட்டில் இருக்கும் ஒரு நபர்  காரில் சென்று கொண்டு இருக்கலாம்

ஆனால் அந்தோ அந்த மனிதன் பரிதாபத்துக்கு உரியவன் என்கிறார்கள் யோகிகள்





06.04.2016

எனது டைரி 02.04.2016

தியானத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் தியானம் என்பது எந்த விருப்பத்தையும் கொண்டிருக்க கூடாத ஒரு விசயம் என்பதை திரும்ப திரும்ப மனதுக்கு சொல்ல வேண்டியதிருக்கிறது

ஆசை என்பதை பொருத்தவரை நமது மனதில்  a , b , c என்ற மூன்று புள்ளிகள் இருக்கின்றன இது இடது மார்பின் நிப்பிலில் இருந்து இரண்டு இஞ்சு கீழே a அதிலிருந்து முறையே இரண்டு இஞ்சு இடைவெளியில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றன .
A - இந்த புள்ளியில் நமது ஆசைகள் உற்பத்தியாகின்றன எந்த ஒரு ஆசையும் இங்கு உற்பத்தி ஆகிறது
B - இந்த புள்ளியில் ஆசை நிறைவேற்றத்துக்கு தேவையான பதிவுகள் பதிவாகின்றன
C- இந்த புள்ளியில் ஆசை நிறைவேறினால் ஏற்படும் மகிழ்ச்சியும் அது நிறைவேறாவிட்டால் ஏற்படும் வலியும் பதிவாகின்றன
இந்த பதிவுகள் ஏற்படுத்தும் புள்ளிகள் மீது கிளீனிங் செய்வது ரொம்ப முக்கியமானது
ஏனெனில் எவ்வளவு அழங்காரமான பங்களாவாக இருந்தாலும் குப்பையை கூட்டி ஒதுக்கி அதை சுத்தமாக வைக்கவேண்டும் அது நமது கடமை
முதல் புள்ளியில் தொடர்ச்சியாக கவனிக்க நமது ஆசைகளை கண்டறியலாம் இரண்டாவது புள்ளியில் இருக்கும் பதிவுகளை வெளியேற்ற தினமும் இருபது நிமிடம் செலவு செய்து அந்த புள்ளி மீது கவனித்து தேவையற்ற ஆசைகள் வெளியேறுவதாக நினைக்க வேண்டும் மற்றபடி மத்த புள்ளிகள் ஆக்டிவேட் ஆகும் போது நமது உணர்வு நினை வளர்ந்து விடும் பிறகு நமக்கு அறியாமல் ஆசைகள் கோபம் காமம் உருவாகாது
இதை பயிற்சி செய்கிறேன் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்
யேசுராஜன்
02.04.2016

எனது டைரி 31.03.2016

நேற்று அந்த பெண் பிரசப்டர் பேசிய விசயங்கள் மனதில் பதிந்து போயின பிராத்தனையை ஒரு கருவியாக்கி அதையே ஆயுதமாக்கி நமது மனதின் மீது எப்படி பிரயோகிப்பது என்பதை சொல்லி கொடுத்தார்
வாழ்க அவர்
ஒரு சிலர் இருக்கிறார்கள் பயன்கருதாது மற்றவர்களுக்கு எதாகிலும் நல்லது செய்யனும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலை செய்வார்கள் அதை போன்ற பெண்மணி இவர்
மதியம் சாப்பாடு எடுத்து வீட்டு காரருக்கு வைத்து விட்டு நான் வருவேனே விளக்கம் கொடுக்கனுமே என தியான செண்டருக்கு ஓடி வந்திருக்கிறார்

நல்ல மனம் வாழ்க ------------------ 
ஆண்டவனை அறிந்து கொள்ள அவன் பாதையில் செல்ல எத்தனை தடைகள் வந்தாலும் அதை நிவர்த்தி செய்து நம்மை அழைத்து செல்பவனும் அவனே
என்ற நம்பிக்கை மட்டுமே  அந்த டார்ச்சை மட்டுமே வைத்து கொண்டு முன்னேறுகிறேன்
யேசுராஜன்
31.03.2016

எனது டைரி 30.03.2016

என்னதான் நமது தந்தை அன்பானவர் சிறப்பானவர் உலகை படைத்தவர் என்றாலும் அவரை நான் தியானிக்கிறேன் என சொல்லி கொண்டாலும் அவரது அருமையான போற்றதக்க குணங்களில் ஒன்று மன்னிக்கும் குணம் அது என்னிடம் இருக்கிறதா என சோதித்து பார்த்துகொண்டேன் அது இல்லை என்பதுதான் உண்மை
உடனே அதற்கான பிரேயரை ஆரம்பிக்கனும் ஏனெனில் பிரேயர் இது ஒன்றுதான் வழி வேற வழியே இல்லை நான் யாரை எல்லாம் துன்புறுத்தி இருக்கிறேனோ மனதான் சொல்லால் செயலால் அவர்களுக்காக மன்னிப்பை கோரும் பிரேயரை தொடங்கிய உடனே அப்போ நம்மை துன்புறுத்தியவர்கள் சரியாக செய்தார்களா என்கிற எண்ணமே
ஆனால் காலத்தின் தூரத்துக்கு எட்டாத நமது பரிணாம வளர்ச்சியில் நாம் செய்த செயல்களின் பதிவுகள் நம்முடைய ஆழ்மனதில் உள்ளன அவற்றிக்கு ஏற்பவே நமது சுபாவம் அமைகிறது நமது சுபாவத்தை மாற்றுவது குதிரை கொம்பான செயலாகும்
ராமா ராமான்னு கத்துகின்ற கிளி வேடன் வந்ததும் கீ கீன்னு கத்தும்னு ராமகிருஸ்ணர் சொல்வதை போல
அமைதி தியானம் இதெல்லாம் இருந்தாலும் நமது கட்டுப்பாட்டை இழந்து நிலை தவறி விடும்போது
நமது மனம் இன்னும் விலங்கின் நிலையை விட்டு சிறிதுதான் உயர்ந்துள்ளது என்கிற நினைப்பு வருகிறது
எனவே பிரேயர் கம் தியானம் என்கிற விசயத்தை எனது பிரசப்டருடன் பேசி விட்டு தொடங்க ஆரம்பித்து இருக்கிறேன்
யேசுராஜன்
30.03.2016

எனது டைரி 28.03.2016

யார் மிகவும் அன்பானவர்கள் அன்னையா அப்பனா என்றால் குழந்தைகள் அன்னை என்றுதான் சொல்லும் ஆனால் அந்த சிவனோ அப்படி அல்ல அவன் அம்மையப்பன் - தாயுமாகி நின்றவன் அவர் விசயத்தில் அப்படி பட்ட கோடுகள் இல்லை
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
நான் பொய் என் நெஞ்சும் பொய் என்பது எப்படி பட்ட ஒரு உண்மை நான் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் குறுகிய நான் நெஞ்சோ நேரத்துக்கு தகுந்தாற்போல் வேடம் பூணும் அதிலிருக்கும் அன்போ எதேனும் வியாபார புத்தியோடு இறைவனை நாடும் அதனால் இதெல்லாம் பொய் என்கிறார் ஆனால் அழுதால் உன்னை பெறலாமே என்கிறது ஒரு குழந்தை பாவம்
நான் அழுதால் என் தாயாகிய தந்தை ஓடோடி வருவான் என்பது அளவிட முடியாத அன்புநிலை
இத்தனை மூச்சை இழுத்து இத்தனை நொடி நிறுத்தி இத்தனை முறை விடுதல் வேண்டும் சக்கரங்களின் மனதை நிறுத்தல் வேண்டும் இத்தனை நியமம் இத்தனை ஆசனம் என்பதெல்லாம் தேவையே இல்லை
அழுதால் உன்னை பெறலாமே
யாராவது அழுதிருக்கிறோமா நான் அழுதிருக்கிறேனா - உண்மையில் ஆண்டவனை காண விரும்பி அழுதிருக்கிறேனா என யோசித்தி பார்கிறேன் இல்லை என்ற பதில்தான் வருகிறது
யேசுராஜன்
28.03.2016

எனது டைரி 25.03.2016

மாயை என்கிறோமே அந்த மாயை என்பதுதான் என்ன நமது மனம்தானே அது நாமே நமக்கு ஏற்படும் எண்ணங்களில் இருந்து விடுபட முடியவில்லை என்றால் நம்மை யார்தான் காப்பாற்ற இயலும்
மேல் மனம் ஆழ் மனம் என்கிற இரண்டு விதமான மனமாக ஒரு பேச்சுக்கு அதை பிடித்து பார்த்தால்
ஆழ்மனதின் வெளிப்பாடுதான் நமது சிந்தனை பேச்சு செயல் எல்லாமே
இந்த ஆழ்மனம் என்பது வேறொன்றும் அல்ல நமது நனவு மனதின் சில விசயங்கள் பதிந்து போய் அழுத்தமான
விசயமாக ஆழ்மனதில் பதிவு பெற்று விடுகிறது அந்த ஆழ்மனதின் கட்டளைகளை நமது மேல் மனம் விழிப்பின்றி பின்பற்றுகிறது
தொடர் தியானத்தின் மூலம் ஆழ்மனதை கண்ரோலுக்கு கொண்டு வரலாம்
ஆழ்மனதை நாம் பார்க்க பார்க்க நம்மை வெளியே பார்ப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் நீண்ட நேரம் பார்த்து கொண்டே இருப்பார்கள்
ஏனெனில் ரொம்ப ஆழ்மனது என்பது அவர்கள் மனதை தொடும் இடங்களும் இருப்பதால் தான்
யேசுராஜன்
25.03.2016