Saturday 16 April 2016

எனது டைரி 11.04.2016

மனம் எண்ணங்களுடன் போராடுவது ஒரு எல்லைவரைதான் அழுது அழுது ஓய்ந்து போகும் ஒரு குழந்தைக்கு ஒப்பாக அது நின்று விடுகிறது எதோ ஓரிரு எண்ணங்கள் தூவாணம் விழுவது போல் அங்கொன்றும் இங்கொன்றும் வருகிறது
இதான் சமயம் மனதை பிடித்து வைத்து நான் யார் என்ற கேள்வியை கேட்க மனம் மேலும் மேலும் ஒடுங்கி அந்த மூல இடத்தில் நிற்கிறது அங்கேயே அதிக நேரம் நிற்க நிற்க நமது ஆன்ம பிரகாசம் அதிகமாகிறது பிறகு கீழிறங்கி வர மனம் ஒப்பவில்லை
கடந்த செப்டம்பரில் நான் எழுத ஆரம்பித்த போது தியானத்தையும் தொடங்கினேன்
எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகும் தொடர்வதற்கு இறைவன் அன்புதான் காரணம்
தொடர்ச்சியாக இறைவனிடம் இருந்து எனக்கு வழிகாட்டுதல் மற்ற நபர்களிடம் இருந்தோ மற்றவர்களின் கனவு மூலமோ வந்து கொண்டுதான் இருக்கிறது
என்ன தெரிகிறது என்றால் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நூறு அடி எடுத்து வைத்து நம்மை அணைத்து கொள்ள காத்திருக்கிறான்
இந்த மத எல்லைகள் தியானத்தின் ஆரம்பத்திலேயே நொறுங்கி விழுந்து விட்டது ஆச்சரியமே .

முன்பெல்லாம் கோபத்திற்கு பெரிதும் ஆளாவேன் மற்ற உணர்வுகளை சொல்லவே வேண்டியதில்லை இப்போது அது மிகவும்குறைந்து 5 சதவீதத்துக்கு வந்து விட்டது தியானத்தின் பெரும் பயன் இது

No comments:

Post a Comment