Wednesday 23 December 2015

எனது குறிப்புகள் 23/12/2015

நம்பிக்கை அற்ற சூழலில் நகர்ந்து கொண்டுள்ளேன்
ஆங்காங்கே இருக்கும் பீச் மரங்களின் நிழல் போல் நம்பிக்கை நிழல் விடுகிறது
இதோ வந்துவிடும் தூரம்தான் யேசுவின் திருவடி என சொல்லி நடக்கிறேன்
பாதை நீண்டு கிடக்கிறது வழியிலோ கல்லும் முள்ளும்
அதே முட்கள் தாம் யேசுவின் தலையில் தைந்திருந்ததே அதேதான்
நீ தேவ குமாரன் நீ ஏன் சிலுவை சுமக்கனும் எப்படி இருந்தாலும் உமக்கு
உம் தந்தையிடம் இருந்து ஆற்றல் வந்திருக்குமே
இதோ இந்த பாதையை கடத்திவிடு என மனம் ஆற்று கிறது
அங்கே ஒரு குரல் தூக்கிவிடயைய்யா ஏத்தி விடய்யா என்கிறது
சாமியே அய்யப்போ  என்றபடி மலையின் மேல் ஏறும் கூட்டம்
மலை மேல் அய்யப்பன் உக்கார்ந்த நிலையில்
நீயும் சிவனின் செல்வந்தானெ உமக்கும் ஆற்றல் கிடைத்திருக்கும்
என்கிறேன்
புலியின் உறுமல் கேட்கிறது

புலிமேல் அமர்ந்து புன்னகை செய்யும் எழில் முகம் தோன்றுகிறது
அதே முகம் தான் தாடியும் ஏசு வாகிறது

யேசுராஜன்