Wednesday 23 December 2015

எனது குறிப்புகள் 23/12/2015

நம்பிக்கை அற்ற சூழலில் நகர்ந்து கொண்டுள்ளேன்
ஆங்காங்கே இருக்கும் பீச் மரங்களின் நிழல் போல் நம்பிக்கை நிழல் விடுகிறது
இதோ வந்துவிடும் தூரம்தான் யேசுவின் திருவடி என சொல்லி நடக்கிறேன்
பாதை நீண்டு கிடக்கிறது வழியிலோ கல்லும் முள்ளும்
அதே முட்கள் தாம் யேசுவின் தலையில் தைந்திருந்ததே அதேதான்
நீ தேவ குமாரன் நீ ஏன் சிலுவை சுமக்கனும் எப்படி இருந்தாலும் உமக்கு
உம் தந்தையிடம் இருந்து ஆற்றல் வந்திருக்குமே
இதோ இந்த பாதையை கடத்திவிடு என மனம் ஆற்று கிறது
அங்கே ஒரு குரல் தூக்கிவிடயைய்யா ஏத்தி விடய்யா என்கிறது
சாமியே அய்யப்போ  என்றபடி மலையின் மேல் ஏறும் கூட்டம்
மலை மேல் அய்யப்பன் உக்கார்ந்த நிலையில்
நீயும் சிவனின் செல்வந்தானெ உமக்கும் ஆற்றல் கிடைத்திருக்கும்
என்கிறேன்
புலியின் உறுமல் கேட்கிறது

புலிமேல் அமர்ந்து புன்னகை செய்யும் எழில் முகம் தோன்றுகிறது
அதே முகம் தான் தாடியும் ஏசு வாகிறது

யேசுராஜன்

Sunday 29 November 2015

30.11.2015 எனது டைரி குறிப்புகள்

நேற்று காலை முதல் கூடிய சுமார் 50 பேர் கொண்ட குழு தியானத்தில் உக்கார்ந்தது
என்ன இருந்தாலும் இந்த கூட்டு தியானத்தில் சிறிது முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது
அதிகாலை  3.15 அளவில் முழிப்பு வந்து விட்டது ............ அல்லாவின் ஒரு தமிழ் பாடல் மனதில் ஓட ஆரம்பித்தது
அப்போது வந்த கனவில் அல்லாவை வணங்குபவர்களாக தோன்றினார்கள்
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும் என்ற பாடல் மனதில் ஓடி கொண்டே இருந்தது
நான் தியானிப்பதோ வெறும் ஒளியை எங்கிருந்து அல்லா வந்தார் என ஒரே பிரமிப்பு
இதை தியானம் முடிந்ததும் பிரசெப்டரிடம் கேட்டு விட்டேன்
நபிகள் நாயகமும் ஒரு ஹையர் ஆர்க்கிதான் என சொன்னது சந்தேகம் விலகியது
ஆனால் இன்றைய தியானம் மிக அருமை

27.11.2015 -எனது டைரி குறிப்புகள்

தியானத்தின் மிக உயர்ந்த நிலை என்பது 11 வட்டங்களை கடந்ததாம்
நான் எந்த வட்டத்தில் இருக்கிறேன் என்று தெரியவில்லை ஒருவேளை வட்டத்துக்கு வெளியே நின்னுட்டு இருக்கேனோ ?
கடந்த சில நாட்களாக அளவு கடந்த விருப்பம் தியானத்தில் வருகிறது ஒருவேளை இனிமேல் அளவு கடந்த வெறுப்பும் வரலாம் ஆனால் தியானத்தில் ஒரு மணி நேரம் உக்கார முடிவது நல்ல விசயம் என்கிறார்கள்

04.11.2015 எனது டைரி குறிப்புகள்

நமது உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பண மயமாகிவருவது வெட்க கேடு
யாரிடமும் உண்மையான அன்பு இல்லை இல்லவே இல்லை
உண்மையான அன்பு எதுவென்று தேடுவதை விட்டு விட்டு சும்மா இருக்க்லாம்
இதோ கடவுள் நம்முடன் இருக்கிறார் அவருடன் அன்பு செலுத்து வோம் என்றார்
காசி சார் இவர் ஒரு புரபசர் தியானத்தில் நீண்ட காலம் இருப்பவர்
இது ஒரு அருமையான டீம்
அன்பு கடவுளையும் கட்டி போடும் சக்தி வாய்ததுதான்
நான் அழைத்த போது ஏசு கிறித்து கனவில்  வந்ததும் அந்த அன்பில்தானாக இருக்கும்

03.11.2015 - எனது டைரி குறிப்புகள்

நேற்று எனக்குன்னு ஒரு குருநாதர் கிடைத்தார் அவருடன் ஒரு மணி நேரம் தியானம் செய்ததில் ஒரு விசயம் புரிந்தது ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை தாங்க முடியாமல் எனது மனம் இருக்கிறது என்பதையே
மிக நல்ல தியானம் அது அவருடன் செல்பி எடுத்து கொண்டேன்
மனம் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு சென்று விட்டது

இன்னும் இரண்டுநாள் அவருடன் தியானம் செய்யனும்
 
இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு தியானம் என சொல்லிவிட்டார்
சாப்பிட்டதும் தூங்கும் பழக்கமுடிய எனக்கு என்னவோ தூக்கம் வரவில்லை
எனது குருவை சந்திக்கும் ஆர்வம் மிகுதியால் சாப்பிட்டவுடன் சென்று விட்டேன்
இன்றும் நல்ல தியானம் ஆனால் நேற்றுடன் ஒப்பிட இயலவில்லை
திரும்ப வந்து தூங்க முயற்சி செய்தேன் முடியவில்லை
ஆனால் மனம் சோர்வும் அடையவில்லை

யேசுராஜன்

02.11.2015 -எனது டைரி குறிப்புகள்

குடும்பத்தை பராமரிப்பதை விட்டு விட்டு சன்னியாவது சரியா என பாபுஜி மகராஜிடம் கேட்கப்பட்டது
அது இயற்கைக்கு விரோதமானது என்று சொன்ன அவர் ஒரு மனிதனுக்கு இரண்டு இறக்கைகள் வேண்டும்
ஒன்று ஆன்மீகம் இன்னொன்று லெளைகீகம் என்றார்
மிக புதுமையான கருத்து - என் மாஸ்டர் நூலை படிச்சிட்டு சிந்திக்க ஆரம்பித்தேன்

03.11.2015

காலையில் லேசான தூரல்
மழைதான் முதிர் பெண் என்றால் தூரல் அவளது தங்கை
மழை மனைவி என்றால் தூரல் கொழுந்தியால் போலத்தான்
சட்டையை நனைக்கிறதென்ற உணர்வின்றி நின்றிருந்தேன்
இன்றைக்கு தியானம் வேறு இல்லை
அதென்ன தியானம் தூரலில் நனைவதற்கு மேலே

31.10.2015 -எனது டைரி குறிப்புகள்

மழை எனும் அதிசயம் நிகழ்கிறது
மரங்களில் இருந்து மகிழ்சி கீழிறங்கி தரையை நனைக்கிறது
ஒரு டீ உள்ளே சென்றதால் மழையை ரசிக்கிறேன்
மழைக்கும் தேநீருக்கும் எத்தனை பொருத்தம்
ஒன்று சூடானது இன்னொன்று குளிர்ச்சியானது
குளிச்சியை சூட்டால் அணைக்கலாம் ஆனால்
சூடு கட்டுப்படாதோ ?

எனது டைரி குறிப்புகள்

டைரி எழுதுவம் அதை படிப்பதும் சுகமானது

ஆன்மீக பயணத்தில் ஆன்மீக டைரி வைக்கும் படி எனது நண்பர் காசி சார் சொன்னார்

அதை யோசித்து தனியே ஒரு பேப்பர் டைரி வாங்கி எழுதலாம் என நினைத்தேன் ஆனால் அப்படி எழுதினால் அதை பாதுக்காத்து வரவேணும் என்பதால் இந்த மின் டைரியை பிளாக்கை டைரியாகவும் ஆக்கிட்டேஎன்

30.10.2015

என்னை பற்றிய விசயங்களை பிசிக்களா உள்ளவைகள் மறைக்க நினைக்கிறேன் ஆனால் எனது ஆன்மீக அக விசயங்களை வெளிப்படுத்த நினைக்கிறேன் .
எனது பிராத்தனைகள் போதாத போது தியானம் என்றால் என்னவென்ற தேடல் துவங்கியது .
காலை ஆறுமணிமுதல் எனது மொபைலின் ஆப் மூலம் பிராணயாமம் செய்து முடிக்கும் போது மனம் தியானத்திற்கு தயாராகி விட்டதை போல இருந்தது
பிறகு டீ கடைக்கு மீண்டும் செண்டருக்கு சென்றேன்
ஆறு முப்பது முதல் ஏழு முப்பது வரை தியானம்
இன்றைய குறிப்பு ஆன்மீக வாழ்வு எல்லா விசயத்தில் இருந்தும் உங்களை பாதுகாக்காது எனவே உங்கள் வாழ்வின் மிகவும் பலகீனமான பகுதியை அறிந்து புத்திசாலித்தனமாக செயல் படுங்கள்

தியானம் முடிந்தது
நண்பர் ஒருவரை சந்தித்தேன்
மதம் கடந்த ஆன்மீகத்தை குறித்து உரையாடினோம்
தியானம் இந்து மதத்துக்கு உரியது தானே என்றேன்
மதங்கள் எலிமெண்டரி ஸ்கூல் மாதிரி என்றார் அருமையான உரையாடல் அவருடன்
என்னை காட்டிலும் 25 வயது அதிகமான ஒரு மனிதன் அவர்

Monday 5 October 2015

இணைய முகவரியும் -சொந்த முகவரி மறைப்பும் ஏன்?




நான் ஒரு குழுமத்தில் மடல் ஆடி வருகிறேன் – இங்கே எனது சொந்த பெயரும் ஊரும் மொபைல் எண்ணும் விலாசமும் கேட்டார்கள் நான் கொடுக்கவில்லை ஏனெனில் நான் ஏற்கனவே அச்சுரத்திலில் இருக்கிறேன் .

ஒரு சிறுபான்மை மதத்தை சேர்ந்தவன் அல்லது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மை மதம் அல்லது சாதியை கேள்வி கேட்ட இயலாத சூழல் இந்த நாட்டில் நிலவுவதால் எமது சொந்த விலாசத்தை இணையத்தில் வெளியிட இயலவில்லை இதற்காக வெக்கப்படவேண்டியது இந்த அமைப்புதானே தவிர யாமல்ல
இணையத்தில் நாம் யாரையும் தூற்றவோ துன்பப்படுத்தவோ போவதில்லை எனும் போது நான் எதற்கு பயப்பட வேண்டும் மேலும் அப்படி சொந்த விலாசம் கொடுத்தால்தான் மடலாட வேண்டும் என்றால் இவர்கள் என்னை மட்டறுத்துலாம் அல்லது நீக்கலாம்
அதை விடுத்து தொடர்ந்து நீ ஒரு போலி என சொல்லி வருகிறார்கள்
இதன் காரணம் யாதென்று எனக்கு விளங்கவில்லை

யேசுராஜன்

Saturday 19 September 2015

விநாயகர் சதுர்த்தி எரிச்சலை கிளப்பும் விசயம் என்ன?

விநாயகர் என்ற கடவுளை வணங்குகிறார்கள் நாம் எப்படி யேசுகிறித்துவை வணங்குகிறோமோ அப்படியே அவரும் வணக்கத்துக்கு உரிய கடவுள் .

ஆனால் நேற்று எங்கள் பகுதியில் தாரை தப்பட்டைகள் ஒலி எழுப்பினார்கல் எத்தனை மணிக்கு தெரியுமா?

இரவு 10.30 மணிக்கு

அருகில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை கொண்ட வீடுகள் பெரியவர்கள் நோயாளிகள் இவர்கள் எல்லாம் எப்படி தூங்குவார்கள் .

இந்து பெருமக்களே - அமைதியின் வடிவமான விநாயகரை வைத்து இவர்கள் அடிக்கும் கூத்தை கண்டிக்காமல் இருந்து மாபெரும் வரலாற்று தவறை செய்கிறீர்கள்

Thursday 17 September 2015

விநாயகர் சதுர்த்தியும் மக்களிடையே விரோதமும்



விநாயகர் சதுர்த்தியும் மக்களிடையே விரோதமும்

மக்கள் விழித்து கொள்ள கூடாது அவர்கள் விழித்து கொண்டால் நாட்டில் நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விசயங்களை கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் மேலும் நாம் மக்களிடம் என்ன சொல்லு ஓட்டு வாங்குவது ஆகவே சும்மா இருந்த பிள்ளையார் சாமியை எடுத்து ஊர்வலமாக கொண்டு செல்வது என தீர்மானித்தார்கள் இந்த இந்துமுன்னனியினர் ஆர் எஸ் எஸ் .

கிறித்துவர்களும் எப்போதாவது ஊர்வலம் நடத்துவார்கள் ஆனால் வேண்டுமென்றே இந்த பாதையில் போலீஸ் செல்ல கூடாது என்றால் அந்த பாதையில் செல்ல மாட்டார்கள் அதுவும் கிறித்தவ ஊர்வலங்கள் ரொம்ப குறைவு .

ஆனால் மிக மிக அமைதியான கடவுளான மக்களின் எளிமையான கடவுளான இந்த விநாயகரை வைத்து மக்களிடம் பிரிவினை வாதம் தூண்ட வருகிறார்கள்
மக்களை உங்கள் முன் வருவது விநாயகர் சிலைகள் அல்ல ஓட்டு கேட்கும் இந்து கட்சியினர் என்பதை மறவாதீர்கள்
மத ஒற்றுமை காக்க மத வேற்றுமை வாதிகளிடம் இருந்து விலகுவோம்



சாதி ஆதரவுக்கு எதிராக யேசுவின் பதில்

திரு பெருமாள் தேவன் இந்த அன்பர் ஒரு சாதியை அடையாளமாக காட்டிவருபவர் - அதாவது தான் இந்த சாதி அப்படின்னு பெரிய படம் போட்டு பிளாக்கில் உக்கார்ந்து இருப்பவர்

முக்குலத்தோரே உலகின் முதலில் தோன்றியவர்கள் ?

என சொல்லி வருகிறார் http://perumalthevan.blogspot.in/2012/12/blog-post_27.html

இதில் http://perumalthevan.blogspot.in/2013/04/blog-post.html

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு 

என்று ஒரு பதிவை போட்டு வைச்சிருக்காரு 

இதில் பல கேள்விகள் கேட்கபட்டு இருக்கிறது அதெற்கெல்லாம் அண்ணன் பதில் சொல்லவில்லை 

 

அதாவது மரபணு சோதனையில்

 

 //கள்ளர் இனத்தில் ஒரு சிலருக்கே m130 dnaஉள்ளது. மூன்று தனி குலத்திற்கும் அந்த m130 dna உள்ளது என்று யாரும் சொல்லவில்லை.கள்ளர்களுக்கு உள்ளது போல் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் அந்த m130 dna உள்ளது./

 இந்த கமெண்டை படித்தால் சில சாதிகளுக்கு  எம் 130 a என்ற மரபணு இருக்கு அதில ஒரு சாதி அய்யா பெருமாள் தேவன் சாதி உடனே 

உலகத்திலேயே நாங்கள்தான் தோன்றினோம்னு சொல்வது எப்படி அறிவுபூர்வமாக பொருந்தும் 

அடுத்து இவர் சாதி மோதலை நிறுத்துகிறாராம் அது எப்படின்னு பார்கனும் 

இந்த பதிவு அவரே யேசுமீதான கேள்விகளை அடுக்கியதால் அவருடைய வலைப்பூவை தேடி சென்று நாம் ஆராய்ந்து போது கண்டெடுத்த முத்துகளை கவர்ந்து வந்து அவரது புகழை பரப்ப எழுதினேன்

அன்பரே எந்த சாதியும் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை 

மற்றவர்களுக்கு கொடுப்பவரே உயர்ந்தவர் 

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்னு 

அவ்வையார் சொல்லி இருக்காங்க 

 

Tuesday 15 September 2015

யேசுராஜன் யார்?

இணையத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் எனக்கு மதங்களின் பெயரால் நடக்கும் சண்டைகள் மிகவும் கடுப்பேற்றும் விசயமாகும் .

நான் யேசுராஜன் எனது ஊர் திருச்சி ஆனால் முழு விலாசமும் அறிய தரவேண்டும் என்றால் அவர் எனது நண்பராக இருப்பின் தருவேன்

மேலும் சாதி மத துவேசங்களை வளர்ப்பவர்களை இனங்கண்டு மிக சாதாரணமாக உரையாடினாலே அவர்களுக்குள் இருக்கும் வன்முறையை வெளியே கொண்டு வரமுடியும்

நான் கிறித்துவத்தை ஆதரிக்கிறேன் ஆனால் கிறித்து பெயரால் நடக்கும் மதமாற்றம் மற்றும் நாடுகளை ஒடுக்குதலை கண்டிக்கிறேன்

என்னுடன் பேச : yesurajantpr@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்