Sunday 29 November 2015

எனது டைரி குறிப்புகள்

டைரி எழுதுவம் அதை படிப்பதும் சுகமானது

ஆன்மீக பயணத்தில் ஆன்மீக டைரி வைக்கும் படி எனது நண்பர் காசி சார் சொன்னார்

அதை யோசித்து தனியே ஒரு பேப்பர் டைரி வாங்கி எழுதலாம் என நினைத்தேன் ஆனால் அப்படி எழுதினால் அதை பாதுக்காத்து வரவேணும் என்பதால் இந்த மின் டைரியை பிளாக்கை டைரியாகவும் ஆக்கிட்டேஎன்

30.10.2015

என்னை பற்றிய விசயங்களை பிசிக்களா உள்ளவைகள் மறைக்க நினைக்கிறேன் ஆனால் எனது ஆன்மீக அக விசயங்களை வெளிப்படுத்த நினைக்கிறேன் .
எனது பிராத்தனைகள் போதாத போது தியானம் என்றால் என்னவென்ற தேடல் துவங்கியது .
காலை ஆறுமணிமுதல் எனது மொபைலின் ஆப் மூலம் பிராணயாமம் செய்து முடிக்கும் போது மனம் தியானத்திற்கு தயாராகி விட்டதை போல இருந்தது
பிறகு டீ கடைக்கு மீண்டும் செண்டருக்கு சென்றேன்
ஆறு முப்பது முதல் ஏழு முப்பது வரை தியானம்
இன்றைய குறிப்பு ஆன்மீக வாழ்வு எல்லா விசயத்தில் இருந்தும் உங்களை பாதுகாக்காது எனவே உங்கள் வாழ்வின் மிகவும் பலகீனமான பகுதியை அறிந்து புத்திசாலித்தனமாக செயல் படுங்கள்

தியானம் முடிந்தது
நண்பர் ஒருவரை சந்தித்தேன்
மதம் கடந்த ஆன்மீகத்தை குறித்து உரையாடினோம்
தியானம் இந்து மதத்துக்கு உரியது தானே என்றேன்
மதங்கள் எலிமெண்டரி ஸ்கூல் மாதிரி என்றார் அருமையான உரையாடல் அவருடன்
என்னை காட்டிலும் 25 வயது அதிகமான ஒரு மனிதன் அவர்

No comments:

Post a Comment