Thursday 7 April 2016

எனது டைரி 28.03.2016

யார் மிகவும் அன்பானவர்கள் அன்னையா அப்பனா என்றால் குழந்தைகள் அன்னை என்றுதான் சொல்லும் ஆனால் அந்த சிவனோ அப்படி அல்ல அவன் அம்மையப்பன் - தாயுமாகி நின்றவன் அவர் விசயத்தில் அப்படி பட்ட கோடுகள் இல்லை
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
நான் பொய் என் நெஞ்சும் பொய் என்பது எப்படி பட்ட ஒரு உண்மை நான் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் குறுகிய நான் நெஞ்சோ நேரத்துக்கு தகுந்தாற்போல் வேடம் பூணும் அதிலிருக்கும் அன்போ எதேனும் வியாபார புத்தியோடு இறைவனை நாடும் அதனால் இதெல்லாம் பொய் என்கிறார் ஆனால் அழுதால் உன்னை பெறலாமே என்கிறது ஒரு குழந்தை பாவம்
நான் அழுதால் என் தாயாகிய தந்தை ஓடோடி வருவான் என்பது அளவிட முடியாத அன்புநிலை
இத்தனை மூச்சை இழுத்து இத்தனை நொடி நிறுத்தி இத்தனை முறை விடுதல் வேண்டும் சக்கரங்களின் மனதை நிறுத்தல் வேண்டும் இத்தனை நியமம் இத்தனை ஆசனம் என்பதெல்லாம் தேவையே இல்லை
அழுதால் உன்னை பெறலாமே
யாராவது அழுதிருக்கிறோமா நான் அழுதிருக்கிறேனா - உண்மையில் ஆண்டவனை காண விரும்பி அழுதிருக்கிறேனா என யோசித்தி பார்கிறேன் இல்லை என்ற பதில்தான் வருகிறது
யேசுராஜன்
28.03.2016

No comments:

Post a Comment